உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு, திருபுவனை தொகுதியில் மகளிருக்கான விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டு போட்டியில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, என்.ஆர்.காங்., மாநில பொது செயலாளர் ஜெயபால், மகளிர் அணி தலைவி ரேவதி பற்குணன், இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாநில துணை தலைவி புவனேஸ்வரி, தொகுதி தலைவர் இருதயமேரி, கலை இலக்கிய துணை தலைவி சுமதி, செயலாளர் ரேவதி, தொகுதி செயலாளர் தேவி மற்றும் தேன்மொழி விஜயலட்சுமி, சவுந்தர்யா, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை