மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு
08-Dec-2025
புதுச்சேரி: கருவடிக்குப்பம் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ரா மகிருஷ்ணா மடத்தின் பொறுப்பாளர் நித்யேஷ்நந்தா மகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் கணேசன், சேவா சங்க செயலா ளர் சுரேந்தர், பொருளாளர் முத்துராமன் அய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பளுதுாக்கும் போட்டி, கேரம், சதுரங்கம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை இயக்குநர் கிருஷ்ணராஜூ, துணை முதல்வர் சுந்தரமூர்த்தி, தலை மையாசிரியை ஜாஸ்மின், உடற்கல்வி ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் துணை செயலாளர் சுவாமிநாதன், செயல் அலுவலர் தியாகு சுப்ரமணியன், நிர்வாக அதிகாரி ராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Dec-2025