உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் சாதனை

ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வில், பள்ளியில் படித்த மாணவி அனிஷா 600க்கும் 576 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார். மாணவர் ஜெயபிரதன் 492 மதிப்பெண் பெற்று இண்டாம் இடத்தையும், மாணவர் யோகேஷ், 487 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷானந்தர் ஜீ மகராஜ், சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் கணேசன், இயக்குனர் கிருஷ்ணராஜ், சேவா சங்க பொருளாளர் முத்துராமன், செயலாளர் சுரீந்தர், இணை செயலாளர் சாமிநாதன், துணை முதல்வர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.மேலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 2025-26ம் கல்வியாண்டில் 11 வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தில் விலக்களிக்கப்படும் என, பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !