வாக்கிங் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஹெலிபேடு மைதானத்தில் வாகனங்களுக்கு தடை
புதுச்சேரி : 'வாக்கிங்' செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ெஹலிபேடு மைதானத்திற்குள் வாக னங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் போலீசாரின் முடிவிற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.ைஹமாஸ் விளக்கு அமைத்த பிறகு லாஸ்பேட்டை மைதான தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. புதுபொலிவு பெற்றுள்ளது. தினமும் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.பொதுமக்கள் 'வாக்கிங்' செல்வதற்கு வசதிக்காக ெஹலிபேடு மைதானத்தின் நடுப்பகுதியிலும் புத்தம் புது சாலைகள் போடப்பட்டுள்ளன. இங்கு மாலையில் குடும்பத்துடன் 'வாக்கிங்' செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.'வாக்கிங்' செல்லும் மக்களின் பாதுகாப்பு கருதி டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் உத்தரவின்பேரில் ெஹலிபேடு மைதானத்திற்குள் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், எஸ்.பி., வீரவல்லவன் மேற்பார்வையில் லாஸ்பேட்டை போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ெஹலிபேடு மைதானத்தில் நுழைய, ஏர்போர்ட் எதிரே ஒரு வழியும், நீதிபதிகள் குடியிருப்புகள் எதிரே இரண்டு வழிகளும் உள்ளன. இந்த இடங்களில் லாஸ்பேட்டை போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கல்லுாரி சாலை மெயின்ரோடு, ஏர்போர்ட் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறியதாவது:ெஹலிபேடு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாலை நேரங்களில் 'வாக்கிங்' செல்கின்றனர். அந்த நேரத்தில் ெஹலிபேடு மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக பைக் மற்றும் கார்கள் செல்வதால், மக்கள் அச்சப்படகின்றனர். அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ெஹலிபேடு மைதானத்தில் ஒட்டுமொத்தமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மைதானத்திற்குள் செல்லா மல் என்.சி.சி., ஏர்போர்ட்சாலை வழியாகவோ அல்லது சமுதாய மற்றும் தாகூர் கல்லுாரி சாலை வழியாக செல்ல வேண்டும்' என்றார். எந்த பாதிப்பும் இல்லை
போலீசார் எடுத்துள்ள முடிவால் யாருக்கும் பாதிப்பில்லை. குறிப்பாக வாக்கிங் வரும் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. வாக்கிங் வருவோர் வாகனங்களை தாகூர் கல்லுாரியை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவிட்டு மைதானத்திற்குள் வரலாம். அதேபோல் ஏர்போர்ட் சாலை வழியாக வருவோர், அதே சாலையோரம் வாகனங்களை நிறுத்தலாம்.
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
ெஹலிபேடு மைதானத்தில் மாலை நேரங்களில் கர்ப்பிணிகள், முதியோர்கள் என பலரும் வாக்கிங் செல்கின்றனர். ைஹமாஸ் வெளிச்சத்தில் சிறுவர்கள், குழந்தைகளும் ஓடி ஆடி விளையாடுகின்றனர்.ஆனால் இவர்களை பற்றி கவலைப்படாமல் பைக் மற்றும் கார்கள் அச்சுறுத்தும் வேகத்தில் செல்வதால், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முடிவிற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.