மேலும் செய்திகள்
சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம்
11-Jun-2025
புதுச்சேரி; தர்ம சம்ரக் ஷன சமிதி சார்பில், காஞ்சி சங்கராச்சாரியார் பிறந்த நட்சத்திரத்தை கொண்டாடும் வகையில், கோவில் அனுஷ பூஜை செய்யப்பட்டது.புதுச்சேரி பக்தர்களின் ஆன்மிக உணர்வை மேம்படுத்தவும், இந்து மத சம்பிரதாயங்களை மக்கள் ஆழமாக மனதில் பதிவு செய்வதற்கும், தர்ம சம்ரக் ஷன சமிதி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சி சங்கராச்சாரியாரின் பிறந்த அனுஷ நட்சத்திரத்தை, கொண்டாடும் வகையில், நேற்று குறிஞ்சி நகர் விநாயகர் கோவிலில், அனுஷ பூஜை நடந்தது.தொடர்ந்து, ஏகாதச ருத்ரம் எனப்படும் ருத்ர பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்ம சம்ரக் ஷன சமிதி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
11-Jun-2025