உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டேட் வங்கி கடன் மைய கிளை புதிய இடத்தில் திறப்பு விழா

ஸ்டேட் வங்கி கடன் மைய கிளை புதிய இடத்தில் திறப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டேட் வங்கியின் சில்லரை மற்றும் சிறு குறு கடன் வழங்கும் மைய கிளை (ராஸ்மேக்) புதிய இடத்தில் திறப்பு விழா நடந்தது. புதுச்சேரி அண்ணா சாலை, தாவரவியல் பூங்கா எதிரில், இயங்கி வந்த (ராஸ்மேக்) சில்லரை மற்றும் சிறு குறு கடன் மைய கிளை, எல்லைப்பிள்ளைச் சாவடி, ஐயனார் கோவில் அருகே, ஜெய் கிருஷ்ணா பிளாசா, கட்டட முதல் தளத்தில் மாற்றப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில், ஸ்டேட் வங்கி புதுச்சேரி ( ராஸ்மேக்) கிளை உதவி பொதுமேலாளர் நடராஜன் வரவேற்றார். ஸ்டேட் வங்கி சென்னை வட்டார தலைமையக முதன்மை பொது மேலாளர் பர்மிந்தர் சிங் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சென்னை வட்டாரத் தலைமை அலுவலக பொது மேலாளர் பிரவாஷ் குமார் சுபுதி, சேலம் -நிர்வாக அலுவலகம், துணை பொது மேலாளர் கல்பனா, புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு, கிளை உதவி பொது மேலாளர் அன்புமலர் முன்னிலை வகித்தனர். ராஸ்மேக் கிளை, வராக் கடன் மேலாளர் ஜெயப்பிரகாஷ், மெயின் கிளையின் துணை கிளை மேலாளர் ராஜதுரை வெங்கடேசன், முதன்மை மேலாளர் சூர்யபிரகாஷ், ஊழியர்கள் விமல், சுரேஷ் உட்பட அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை