உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில கேரம் போட்டி பரிசளிப்பு விழா

மாநில கேரம் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி; மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பாண்டிச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷன் பதிவு பெற்ற சுவாமி விவேகானந்தா கேரம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான கேரம் போட்டிகள், வாணரப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.இப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பெண் பிரிவில் பூஜா முதலிடம், அதினா 2ம் இடம், பிரியதர்ஷினி 3ம் இடம்; ஆண்கள் பிரிவில் வேல்முருகன் முதலிடம், அஜித்சிங் 2ம் இடம், செபஸ்டின் 3ம் இடம் பிடித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேரம் சங்கத் தலைவர் ஜெகஜோதி, ஞான இருதயராஜ், பரஞ்ஜோதி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை விவேகானந்தா கேரம் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முரளி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை