உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான பெத்தாங் போட்டி

மாநில அளவிலான பெத்தாங் போட்டி

அரியாங்குப்பம்: புதுச்சேரி செயின்ட் ராக் கிளப் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடந்தது. இந்த போட்டியில், புதுச்சேரியில் இருந்து 346 அணிகள் கலந்து கொண்டன.லீக் சுற்று போட்டியில், 338 அணிகள் வெளியேறின. மீதும் உள்ள 8 அணிகள் வரும் 18ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில், விளையாட உள்ளனர். வெற்றி பெறும் அணிகளுக்கு, முதல் பரிசாக இருவருக்கு தலா ரூ. 7,000; இரண்டாம் பரிசாக இருவருக்கு தலா ரூ.6,000; மூன்றாம் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.4,000; நான்காம் பரிசாக 8 பேருக்கு தலா ரூ.2,000 வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை