உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்னை சாகுபடி குறித்து மாநில அளவிலான கருத்தரங்கம்

தென்னை சாகுபடி குறித்து மாநில அளவிலான கருத்தரங்கம்

அரியாங்குப்பம்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மற்றும் கோயம்புத்துார் தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல அலுவலகம் இணைந்து தென்னை சாகுபடி பயன்கள் குறித்து கருத்தரங்கம் நடத்தியது.கடலுார் சாலை, தவளக்குப்பம் தனியார் திருமண் மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர் அறவாழி வரவேற்றார். கொச்சி தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலசுதாகரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார், தலைமை அதிகாரி அனுமந்தே கவுடா ஆகியோர் வாழ்த்துறை நிகழ்த்தினர்.சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சபாநாயகர் செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதனை தொடர்ந்து, விவசாயிகளுக்கு தென்னக்கன்றுடன் இடுபொருள் வழங்கினர். காரைக்கால் தரக்கட்டுப்பாடு கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெயசங்கர், பயிற்சி வழி தொடர்பு திட்டம் கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகீர் உசைன், காரைக்கால் வேளாண் கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ், பா.ஜ. பிரமுகர் ஞானசேகர் உள்ளிட்ட பலர், கலந்து கொண்டு, தென்னை சார்ந்த உற்பத்தி, மற்றும் தொழிநுட்ப ரீதியான அம்சங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தென்னை சாகுபடியில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.வேளாண் அலுவலர் சிவக்குமார் (தோட்டக்கலை) நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை