உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகையிலை கட்டுப்படுத்த மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம்

புகையிலை கட்டுப்படுத்த மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் புகையிலையை கட்டுப்படுத்துவதற்கான மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம் நடந்தது. புதுச்சேரி அரசு நலவழித்துறையின் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஜிப்மர் இணைந்து நடத்திய மாநில அளவிலான பயிற்சிக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை பேராசிரியர் கணேஷ் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் பேசினர். கலெக்டர் குலோத்துங்கன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், புதுச்சேரியில் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள், புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகள், இடர்ப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், நிகழ்ச்சியில் புகையிலை இல்லா பள்ளி வளாகம் என்னும் சான்றிதழை, கலெக்டர் ஐந்து பள்ளிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில ஆலோசகர் சூரியக்குமார் மேற்கொண்டார். பேராசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை