உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அறிவியல் கண்காட்சி நாளை துவக்கம்

மாநில அறிவியல் கண்காட்சி நாளை துவக்கம்

புதுச்சேரி: மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நாளை ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்குகிறது.புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககத்தின் சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.இக்கண்காட்சியை புதுச்சேரி நகராட்சி பள்ளியில் இருந்து 900 மாணவர்கள், 85 ஆசிரியர்கள், 98 பொதுமக்கள் பார்வையிட்டனர். மண்டல அறிவியல் கண்காட்சியில் துவக்க பள்ளி பிரிவில் 8 படைப்புகள், நடுநிலைப்பள்ளி பிரிவில்-12, உயர்நிலைப் பள்ளி பிரிவில்-12, மேல்நிலைப்பள்ளி பிரிவில்-8 படைப்புகள், ஆசிரியர்களின் அறிவியல் படைப்புகள்-15 என 55 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.நாளை 6ம் தேதி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்க உள்ளது. இதில் புதுச்சேரி மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட 55 படைப்புகளுடன், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் இருந்தும் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல், சிலம்பாட்டம், கிராமிய குழு நடனம், இசை கருவி வாசித்தல், மவுன மொழி நாடகம், மேஜிக், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ