மேலும் செய்திகள்
சிலம்பம் பயிற்சி துவக்கம்
17-Sep-2025
புதுச்சேரி : பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பக் கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி வரும் 12ம் தேதி நடக்கிறது. அதற்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து, பல்வேறு பரிசுகளை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான திறந்த சிலம்பம் போட்டி வரும் அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது. தனித்திறன் மற்றும் தொடுமுறை என இரண்டு பிரவுகளில் நடைபெறும் இப்போட்டி, கழகத்தின் விதிமுறைகளின்படி நடத்தப்படும். மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.முதலிடம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஆர்வமுள்ள போட்டியாளர்கள் வரும் 5ம் தேதிக்குள் 81446 20533 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
17-Sep-2025