உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் தகவல்

 நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் தகவல்

புதுச்சேரி : நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிர்சா முண்டா 150வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவ தின விழா நடந்தது. கம்பன் கலையரகத்தில் நடந்த விழாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசுகையில், 'நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர். அரசும் பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்களைத் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியின மக்கள் தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர அரசு மனைப்பட்டா கொடுத்துள்ளது. மேலும், அவர்களுக்கு கல்வீடு கட்ட அரசு மானியம் அளித்து வருகிறது. நரிக்குறவர்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் முழு பட்ஜெட்டில் 16.5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது' என்றார். விழாவில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சிவசங்கர், துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் அர்ஜீன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி