உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவக் கல்லுாரி இட ஒதுக்கீடு போல் மற்ற படிப்புகளுக்கு வழங்க நடவடிக்கை

மருத்துவக் கல்லுாரி இட ஒதுக்கீடு போல் மற்ற படிப்புகளுக்கு வழங்க நடவடிக்கை

புதுச்சேரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நல்லவாடு கிராமத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி நிவாரண நிதி வழங்கி, பேசியதாவது:அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று திட்டங்களை தொடங்குங்கள் என கவர்னர் தெரிவித்தார். அதனால் இந்த நிகழ்ச்சி இந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நான் புதிதாக கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தபோது அதிகளவில் ஆதரவு அளித்த கிராமம் நல்லவாடு.மீனவ சமுதாய மக்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி வாழ்க்கை தரம் உயர்வதற்கு, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் மீன்பிடி தடைக்கால நிவாரணம்.புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சுற்றுலா மூலமாக வருகின்ற வருவாய் அதிகம் என்பதால், மக்கள் மீது அதிக வரியை நேரடியாக திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்துவது முக்கியமாக இருக்கிறது. நல்லவாடில், படகுகளை நிறுத்த மீன்பிடி துறைமுகம் கேட்டிருந்தனர். அதனை விரிவுபடுத்தவும், புதிய துறைமுகம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரிகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது போல், பிற படிப்புகளை படிக்கவும் இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை செய்து வருகிறோம்.மீனவ சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற ரூ.123 கோடி நிதியை முழுவதுமாக செலவிடுகின்ற நடவடிக்கையை அரசு செயல்படுத்துப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை