உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர் தின போட்டி பரிசளிப்பு விழா

மாணவர் தின போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி : திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், மாணவர் தின போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, மாணவர் தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை, பேச்சு, வினாடி - வினா மற்றும் ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், செயின்ட் ஜெட்ருட், லட்சுமி, நிர்மல், மேரி போர்ஷியா, ஏஞ்சலின் தேவப்பிரியா, ஹேமாவதி, ராமாயி, இசை ஆசிரியர் தணிகாசலம், கணினி பயிற்றுநர் கவுசல்யா, அலுவலக ஊழியர்கள் வேல்முருகன், ஷர்மிளா சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கனகவல்லி நன்றி கூறினார். ஆசிரியர் சாந்தி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை