மாணவர் தின விழா போட்டி
புதுச்சேரி: பாக்கமுடையான்பேட் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் தின விழா போட்டிகள் நடந்தது. இதில், வட்டம் 1ல் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஊக்கப்படுத்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலைவாணி, ராமதாஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.