உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு

ஆற்றில் மூழ்கிய மாணவர் சாவு

அரியாங்குப்பம்:' அரியாங்குப்பம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் ஹரிஷ், 18; புதுச்சேரி கதிர்காமம் அரசு கலைக்கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவர், நோணாங்குப்பம் ஆறு, அலுத்துவெளி ஆற்றங்கரையில் இறங்கி நேற்று மதியம் மட்டிக்கல்லி பிடித்தார். அப்போது, ஹரிஷ் திடீரென தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தவளக்குப்பம் போலீசார் மற்றும் புதுச்சேரி தீயணைப்பு துறையினர், ஹரிஷ் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை