பஸ் மோதி மாணவி காயம்
புதுச்சேரி: தனியார் கல்லுாரி பஸ் மோதி கல்லுாரி மாணவி படுகாயமடைந்தார்.இ.சி.ஆர்., சாலையில் இருந்து, தனியார் கல்லுாரி பஸ் நேற்று வந்து கொண்டிருந்து. உழவர்கரை தாசில்தார் அலுவலகம் அருகே சென்ற பஸ் எதிர்பாரதவிதமாக கல்லுாரி மாணவி சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவிக்கு அங்கிருந்தவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.வடக்கு பகுதி, போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.