மாணவர் மாயம்
நெட்டப்பாக்கம் : டியூஷன் சென்ற மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி. இவர் கணவர், பிள்ளைகளுடன், கரியமாணிக்கம் பழைய இந்தியன் வங்கி வீதியில் வசித்து வருகிறார். இவரது பேரன் பிரேம்ஜித்குமார், 12. இவர் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 10ம் தேதி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தவர், மாலை 6:00 மணிக்கு டியூஷன் சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.