மாணவர்கள் போராட்டம்
காரைக்கால்: திருநள்ளாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் நியமிக்கக் கோரி, மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.காரைக்கால், திருநள்ளாறு தொகுதி, தேனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் மூன்று மாதங்களாக இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆசிரியரை நியமிக்கக் கோரி, மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த கல்வித்துறை துணை இயக்குநர் ஜெயா மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் ஆசிரியர் நியமிக்கப்படும் என, உறுதியளித்ததால் மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.