பல்கலைக்கழகத்தில் மாணவர் கழக துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், ஐ.டெக் வெப் 26 மாணவர் கழக துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது: மாணவர்கள் தலைமைத் திறன், புதுமை சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் கீதா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஷாலினி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.