சுப்பையா பிறந்தநாள் விழா
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தியாகி சுப்பையா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நெல்லித்தோப்பு சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், நேரு ஆகியோர் மாலை அணிவித்தனர்.தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், பொருளாளர் சுப்பையா, மாநில குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதநாதன் உட்பட பலர் மாலை அணிவித்தனர்.சுப்பையா இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு, நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் ராமச்சந்திரன் மாலை அணிவித்தனர்.ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் சார்பில், இந்திரா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று, நெல்லிதோப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில், அண்ணா நகரில் அலங்கரித்து வைத்திருந்த சுப்பையா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.