மேலும் செய்திகள்
இலக்கை தாண்டிய பசுமைப் பயணம்!
25-Dec-2024
அரியாங்குப்பம்: வீட்டுக்கு, ஒரு மரம் வளர்க்கும், திட்டத்தின் கீழ், பூரணாங்குப்பத்தில், பொதுமக்களுக்கு, பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறை சார்பில், அடுத்த 5 ஆண்டுகளில், பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் செயல் திட்டத்தின் கீழ், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பொதுமக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இப்பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கினார். மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அதில், மா, எலுமிச்சை, மாதுளை, பலா, சீதா, கொய்யா உள்ளிட்ட பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை, இளநிலை ஆய்வக உதவியாளர் இளங்கோ, திட்ட அலுவலர் சாந்தலட்சுமி, விமல்ராஜ், முன்னாள் பா.ஜ., தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தனசுந்தரம்மாள் சாரிடபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Dec-2024