மேலும் செய்திகள்
சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன வழிபாடு
02-Jan-2026
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சியாமளா நவராத்திரி விழா நேற்று துவங்கியது. புதுச்சேரி- திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ராஜமாதங்கி அம்பாளுக்கு சியாமளா நவராத்திரி விழா நேற்று துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி, தினமும் மாலை 6.00 மணிக்கு அம்பாளுக்கு அபி ேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து , இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து ராஜமாதங்கி அம்பாளுக்கு மகா அபி ேஷகம், 108 வலம்புரி சங்காபி ேஷகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ அலங்காரம் , சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்துள்ளனர்.
02-Jan-2026