தேக்வாண்டோ போட்டி பரிசளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் 17வது மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.இதில், கிட்ஸ், சப்- ஜூனியர், கேடட், ஜுனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 800 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, சங்கத் தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். தேக்வாண்டோ நிறுவன செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார்.அமைச்சர் நமச்சிவாயம், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று எ.எம்.டி.சி., அணிக்கு சாம்பியன் பட்டத்திற்கான சுழற்கோப்பை வழங்கப்பட்டது.முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வகணபதி, சங்க துணை தலைவர் கதிரவன், நடராஜ், வழக்கறிஞர் கோமுகி, சரவணன், சங்க பொருளாளர் ஆனந்த் மற்றும் கிளை செயளாளர்கள் பிரபாகரன், தினேஷ் சங்கர், பாண்டியராஜ், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.