மேலும் செய்திகள்
வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
04-Mar-2026
வில்லியனுார்: தாய் வழி சான்றிதழ் கேட்டு, புதுச்சேரி பூர்வீக பெண்கள் குடும்ப நல கூட்டமைப்பு நிர்வாகிகள் வில்லியனுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற தீர்ப்பின்படி, புதுச்சேரி அரசு எம்.பி.சி., - ஓ.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் தாய் வழி சான்றிதழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கி உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி வருவாய்த் துறையினர் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி தாய் வழி சான்றிதழ் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து புதுச்சேரி பூர்வீக பெண்கள் கூட்டமைப்பு தலைவர் நித்தியானந்தம் தலைமையில், வில்லியனுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தீனா, விடுதலை பழங்குடியினர் முதன்மை செயலாளர் ஏகாம்பரம், சமூக ஜனநாயக கூட்டமைப்பு வெற்றிச்செல்வன், பாரதிதாசன், பிரசன்னா, வி.சி.க., தாயப்பன், ஞானவேல், சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
04-Mar-2026