தமிழ் வளர்ச்சி மன்ற நிகழ்வு
புதுச்சேரி: புதுச்சேரி இருதயமேரி பள்ளியில், கலை இலக்கிய தமிழ் வளர்ச்சி மன்றத்தின் 27வது நிகழ்வு நடந்தது. மாணிக்கம் தலைமை தாங்கி பேசினார். குமரவேல் வரவேற்றார். வேணு ஞானமூர்த்தி, செல்வி மேரி ஆகியோர் பேசினர். 'உலகத் தாய்மொழி' என்ற தலைப்பில் பைரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், கலியபெருமாள், அருள்ஜோதி, பத்மநாதன், அமர்ஜோதி, நித்யஸ்ரீ, சோழா புகழேந்தி, வெற்றிவேலன், யுக பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்யமூர்த்தி நன்றி கூறினார்.