உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லோக் நிவாசில் தேனீர் விருந்து

லோக் நிவாசில் தேனீர் விருந்து

புதுச்சேரி: சுதந்திர தினத்தையொட்டி, லோக் நிவாசில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. சுதந்திர தினத்தில் புதுச்சேரி லோக் நிவாசில் அரிசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தேனீர் விருந்து கொடுப்பது வழக்கம். அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி, நேற்று தேனீர் விருந்து நடந்தது. விருந்துக்கு வந்த அனைவரையும் கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம்  மற்றும்  எம்.எல்.ஏ.,க்கள்., கலந்து கொண்டனர். மேலும் தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அரசு செயலர்கள், அரசு அதிகாரிகள், கலைமாமணி விருதாளர்கள் என பலர் பங்கேற்றனர். விருந்தில் டீ, காபி, சமோசா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  பத்மஸ்ரீ விருதாளர் தட்சிணாமூர்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !