மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு
புதுச்சேரி: மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாகே பிராந்தியம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஜேம்ஸ் என்பவர் கடந்த 11ம் தேதி தாக்கியுள்ளார். நடந்த சம்பவத்தை மாணவர் தனது தந்தையிடம் கூறினார். மாணவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, ஆசிரியரிடம் விசாரித்து வருகின்றனர்.