மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
27-Jan-2025
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் 'மார்க்கதர்ஷன்' திட்டத்தின் மூலம் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடந்தது.புதுச்சேரி பல்கலைக்கழக மார்க்கதர்ஷன் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பேராசிரியர் சுஜாதா, கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, துணை முதல்வர் ஐயப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பயிற்சியில், ஆசிரியர்களுக்கு விளைவுகள் அடிப்படையிலான கல்வி வழங்கும் முறை, அதன் அவசியம், தேசிய அங்கீகார வாரியத்தில் அங்கீகாரம் பெரும் முறை, அதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பெங்களூரு ஆர்.வி., பொறியியல் கல்லுாரியின் சிவில் துறை டீன் ராதாகிருஷ்ணன், கணினி அறிவியல் துறையின் டீன் ரமாகாந்த் குமார், பி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி தொலைதொடர்பு துறை பேராசிரியர் கண்மணி புத்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி மார்க்கதர்ஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
27-Jan-2025
27-Jan-2025