வாசகர்கள் கருத்துகள் ( 3 )
+1 had been introduced in 1979 only
1976 ல்+1 ஏது???
அப்படியா
புதுச்சேரி : 'பள்ளிக்காலத்திலேயே, நிர்மலா சீதாராமன், பல துறைகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராக விளங்கினார்' என, அவரது பள்ளி ஆசிரியர் நினைவு கூர்ந்தார்.புதுச்சேரியில் நடந்த இலக்கிய திருவிழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். விழாவில் அவருடைய பள்ளி ஆசிரியர் சபிதா, பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அவரது காலில் விழுந்து, மத்திய அமைச்சர் ஆசி பெற்றார்.பின்னர், முன்னாள் ஆசிரியர் சபிதா கூறியதாவது: கடந்த, 1974-76ம் ஆண்டு காலகட்டத்தில், திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில், நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். அப்போது நிர்மலா சீதாராமன் என்னிடம், 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்தார். நான் அவருக்கு சமூக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். அவர் அப்போதே, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.ஒரு வினாடி-வினா போட்டியில், 'மிசா' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளி மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு, சரியான பதில் அளித்த ஒரே மாணவி, நிர்மலா சீதாராமன் மட்டும் தான். அவர் பதில் சொன்னதற்கு முதல் நாள் தான், அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த விஷயமும், அன்றைய நாள் காலையில் செய்தித்தாளில் தான், வெளியாகி இருந்தது. அந்தஅளவிற்கு பள்ளிக்காலத்திலேயே, பொது அறிவில் சிறந்து விளங்கியவர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
+1 had been introduced in 1979 only
1976 ல்+1 ஏது???
அப்படியா