மாணவிகளுக்கு தொல்லைதலைமை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருகுறுக்கை புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விக்ரமன்; இவர் அப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து, வட்டார கல்வி அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த அறிக்கையை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இளமதிக்கு அனுப்பினர். அதன்பேரில், தலைமை ஆசிரியர் விக்ரமனை சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.