உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பன் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

கம்பன் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பிளஸ் 1 மாணவி தன்யலட்சுமி வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு, பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாணவி சினேகா தொகுப்புரையாற்றினார். விழாவில் பள்ளி மாணவர்களின் குழு நடனம், கவிதை, ஆங்கில உரை, பாடல், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஒருங்கிணைப்பினை மாணவர்கள் சாருமதி, தீபன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். மாணவி செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை