உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு; பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

 ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு; பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி: ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கை: புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெப்ப அலை வீசியது. அதன் காரணமாக ஏப்ரல் 28, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய மூன்று தினங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்ய கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 30ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்கப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதி விடுப்பை ஈடு செய்ய நாளை 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக் கல்வித்துறை சார்பில், அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை 15ம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியை சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை 15ம் தேதி விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்பகள் நடைபெறும். இவ்வாறு, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ