மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2026
புதுச்சேரி: டில்லி அகில பாரதிய ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 2026ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலை மை தாங்கி, காலண்டரை வெளியிட்டார். இதில், ஆசிரியர் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் பாட்சா, பொது செயலாளர் தீபக், பொருளாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கூட்டமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு நெருங்குவதால், விரைந்து லேப்டாப் வழங்கவும், ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
27-Jan-2026