உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

புதுச்சேரி : அரும்பார்த்தபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அரும்பார்த்தபுரம், வி.ஐ.பி., நகர், முதல் குறுக்கு தெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அரும்பார்த்தபுரம், புது வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் பிரசாந்த், 22, என்பதும், சோதனையில், அவர் 4 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 28 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. பிரசாந்தை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ