கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் பூங்கா அருகில் வாலிபர் ஒருவர் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தருமாபுரியை சேர்ந்த ஜீத்து, 29; என தெரியவந்தது. அவரிடமிருந்து 3 ஆயிரம் மதிப்புள்ள 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.