உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெஞ்சு வலியால் வாலிபர் சாவு

நெஞ்சு வலியால் வாலிபர் சாவு

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தாமஸ், 27; அதே பகுதியில், தள்ளு வண்டியில் பஜ்ஜி, போண்டா கடை வைத்துள்ளார். கடந்த 22ம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.நேற்று முன்தினம், திடீரென மயங்கி விழுந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ