கார் மோதி வாலிபர் பலி
காரைக்கால்: காரைக்கால், மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரியும் நாகை மாவட்டம், சிக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 40. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.நாகை தேசிய நெடுஞ்சாலை திருப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக சென்றபோது, திருப்பட்டினம் வட கட்டளை என்ற இடத்தில், சாலையில் தாறுமாறாக வந்த கார், பாலசுப்ரமணியன் மீது மோதியது. பின்னர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி விட்டு அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. காயமடைந்த பாலசுப்ரமணியன் மற்றும் காரில் சென்ற 6 பேரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.