உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபருக்கு கத்தி குத்து; ரவுடி கைது

வாலிபருக்கு கத்தி குத்து; ரவுடி கைது

அரியாங்குப்பம்: முன்விரோத தகராறில், வாலிபரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 22; மொபைல் ேஷா ரூமில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பரிடம் தகராறு செய்தது தொடர்பாக, அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன், 21, என்பவரை சக்திவேல் தட்டி கேட்டார். இதனால், இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது.அரியாங்குப்பத்தில், கடந்த 16ம் தேதி, உறியடி விளையாட்டு நடந்தது. அங்கு நண்பர்களுடன் நின்ற சக்திவேலை, ஹேமச்சந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த, அவர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.கத்தியால் குத்திய ஹேமச்சந்திரன் மீது, கஞ்சா, போக்சோ, ரவுடிசம் செய்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ேஹமச்சந்திரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை