உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாலி செயின் திருட்டு: போலீசார் விசாரணை

தாலி செயின் திருட்டு: போலீசார் விசாரணை

புதுச்சேரி: கோவிந்தசாலையில் 7 சவரன் தாலி செயின் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, கோவிந்தசாலையை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜெயந்தி, நீரிழிவு நோயால் பாதிப்பட்டு, வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து வருகிறார். டயாலிசிஸ் செய்ய மருத்துவமனைக்கு செல்லும் போது, ஜெயந்தி தனது 7 சவரன் தாலி செயினை வீட்டில் கழட்டி வைத்து விட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு சிகிச்சைக்கு செல்ல, தாலி செயினை வீட்டில் அறையில் உள்ள கைப்பையில் வைத்து விட்டு சென்றார்.சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தாலி செயினை காணவில்லை. வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !