அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த சபாநாயகருக்கு நன்றி
புதுச்சேரி: மணவெளி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த சபாநாயகர் செல்வத்திற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மணவெளி தொகுதி, நோணாங்குப்பம் கிராமம் ஆற்றங்கரை அருகில் வசிக்கும் பொதுமக்கள் சாலை, வடிகால், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ., சபாநாயகர் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சபாநாயகர் செல்வம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி சிமென்ட் சாலை, வடிகால் வசதி, மின் கம்பம் அமைத்து புதிய மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். இதையடுத்து, அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த சபாநாயகர் செல்வத்தை அப்பகுதி மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.