உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்

புதுச்சேரி: மகாளய அமாவாசை தினத்தில், புதுச்சேரி கடற்கரையில்,முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்து, வழிபட்டனர். புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஐதீகமாக இருந்து வருகிறது. நேற்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகில், ஏராளமானோர் குவிந்தனர். பொதுமக்கள் காலையிலேயே வந்து, கடலிலில்புனித நீராடினர். தொடர்ந்து, கடற்கரையில், பூ, பழங்கள், காய்கறிகளை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பெண்கள் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதே போன்று, வீராம்பட்டினம்,புதுக்குப்பம், நல்லவாடு ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடலில் நீராடி முன்னார்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை