காங்., ஆலோசனை
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் மாவட்ட காங்., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட காங்., மேலிடப் பொறுப்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், விநாயகம், பொதுச் செயலாளர் சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.