மேலும் செய்திகள்
டிரைவர் தற்கொலை
05-Oct-2024
புதுச்சேரி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் தேரடி வீதியைச் சேர்ந்தவர் பாபு, 52; கார் டிரைவர். இவருடைய இளைய மகன் விஷ்ணுகுமார், 19. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்த பாபு, குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2024