உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடலில் குளித்த போது, கடல் அலையில், சிக்கி மாயமான பி.டெக்., மாணவர்கள் இருவரின் உடல்கள் நேற்று கிடைத்தது.புதுச்சேரி அடுத்த வழுதாவூர் குமரப்பாளையம் முருகையன் மகன் திவாகர்,20; முத்திரையர்பாளையம் சேரன் நகர் புருேஷாத்தமன் மகன் மோகன்தாஸ்,21; மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வந்த இவர்கள் நேற்று முன்தினம் சக நண்பர்களுடன், வீராம்பட்டினம் ரூபி கடற்கரையில் குளித்த போது, இரண்டு பேரையும் கடல் அலை இழுத்து சென்றது. தகவலின் பேரில், , அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், ஏட்டு சக்திவேல் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 5 படகில் கடலுக்கு சென்று தேடினர். அதில், நேற்று காலை 10:00 மணிக்கு இரு மாணவர்களின் உடலை கண்டெடுத்தனர். பின்னர், இருவரின் உடலும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை