துத்திப்பட்டு மைதானத்தில் பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது
வில்லியனுார்: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் நேற்று மாலை துவங்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி (சி.ஏ.பி) இரண்டாம் ஆண்டு பாண்டிச்சேரி பிரிமியர் லீக் (பி.பி.எல்) போட்டி நேற்று மாலை 6.30 மணிளவில் துவங்கியது. துவக்க விழாவில் சி.ஏ.பி., தலைவர் தமோதிரன், ஸ்ரீராம் கேபிட்டல் தலைவர் ராஜேஷ் சந்திரமவுலி, அணி உரிமையார்கள் வில்லியனுார் மோஹித் கிங்ஸ் ரவிக்குமார், ஊசுடு அக்காடு வாரியர்ஸ்- நித்தின்பிரனாவ், மாகே மைலோ ஸ்ட்ரைக்கர்ஸ்- ஸ்ரீகரண், காரைக்கால் நைட் ரைடர்ஸ்-ஜான்சன், ரூபி வைட் டவுன் லெஜெண்ட்- நியான் ஷியாம் காங்கேயன் மற்றும் ஏனம் ஜெலிட் ராயல்ஸ் உரிமையார் ஜான்சன், ஐ.சி.ஏ., உறுப்பினர் மகாதேவன், பி.பி.எல்., சேர்மன் மகேஷ் மற்றும் அணிகளின் கேப்டன்கள் மோகித்- ரோகித், ஏனம் ஜெலிட்- ஆதித்யா கார்வல், காரைக்கால் -கவுதம் திலீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஆறு அணிகளின் வீரர்கள் முன்னிலையில் மைதானத்தில் கோப்பை வைக்கப்பட்டது. மேலும் மைதானத்தில் புதிய வரவாக டாக் ரோபோ, கிரிக்கெட் பந்தை மைதானத்திற்குள் கொண்டு சென்று அம்பையரிடம் கொடுத்தனர்.திரளான ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர்.தொடர்ந்து 27ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. லீக் போட்டிகள் பகல் 2:00 மணிக்கும், மாலை 6:00 மணி என இரு போட்டிகள் நடைபெறும். முதல் நாள் போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ்- ரூபி வைட் டவுன் அணியும் விளையாடியது.இன்று(7 ம் தேதி) மதியம் காரைக்கால் கிங்ஸ்-மாகே மைலோவும் அணியும், மாலையில் வில்லியனுார் மோகித்- ஏனம் ஜெலிட் அணியும் மோதுகின்றது. இந்நிகழ்ச்சியில் சி.ஏ.பி .,செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன், சி.இ.ஓ. மயக்மேத்தா, பயிற்சியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.