மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
14-Jan-2025
வானுார் : வானுார் அருகே, தனியார் பார்ம் ஹவுஸ் சூப்பர்வைசர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன், 56; இவர், கோரிமேடு அடுத்த விழுப்புரம் மாவட்டம், சின்ன பட்டானுாரில் உள்ள தனியார் பார்ம் ஹவுசில், சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர், சதானா வனப்பகுதி அருகே மயங்கி விழுந்து இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, சந்திரன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
14-Jan-2025