உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைவர்களின் வரலாற்றை வரும் தலைமுறைக்கு சொல்ல வேண்டும்: கவர்னர் கைலாஷ்நாதன் 

தலைவர்களின் வரலாற்றை வரும் தலைமுறைக்கு சொல்ல வேண்டும்: கவர்னர் கைலாஷ்நாதன் 

புதுச்சேரி: தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நம்முடைய வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டும் என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார். புதுச்சேரி மேரி ஹாலில் நடந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் விழாவில் கவர்வர் கைலாஷ்நாதன் பேசியதாவது: நாட்டிற்காக வாழ்ந்து, நாட்டிற்காகவே உயிர் தியாகம் செய்த தலைவர்கள் - வரலாற்றில் மிக சிலரை தான் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அரிதான வரலாற்று தலைவர்களில் ஒருவர் தான் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி. பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைக்கப்பட்ட நம்முடைய தலைவர்களின் வரலாற்றை இந்த நாடும் நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார்கள். நம்முடைய நாட்டின் வரலாறு என்பது நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தின் வரலாறு என புரிந்து கொள்ளுங்கள். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதி, வ.உ.சி. இன்னும் எத்தனையோ பேர். இவர்கள் ஒவ்வொருவரும் பாரதத்தை உருவாக்கிய தேசபக்தர்கள். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து, பாரத நாட்டை உருவாக்கியவர்கள்.அத்தகைய தலைவர்களின் வாழ்க்கையை ஒரு பாடமாக அல்ல, நம்முடைய வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டும். வரும் தலைமுறைகளுக்கு அந்த தலைவர்களின் வரலாற்றை நாம் சொல்ல வேண்டும் இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி