உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்த மூதாட்டியின் அடையாளம் தெரிந்தது

 இறந்த மூதாட்டியின் அடையாளம் தெரிந்தது

அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் அருகே டி.என்., பாளையம் மலட்டாறில், அடையாளம் தெரியாத 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடந்த 10ம் தேதி இறந்து கிடந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இறந்த மூதாட்டி பூரணாங்குப்பத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி செங்கமலம், 75; என்பதும், இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவரும் இறந்த நிலையில், இவர் வழுதாவூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். ஒவ்வொரு மாதமும் முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கு, பூரணாங்குப்பம் வங்கிக்கு வந்து சென்றார். சம்பவத்தன்று அவர் அபிேஷகப்பாக்கம் வழியாக நடந்து சென்று, ஆற்றில் குளிக்க இறங்கிய போது, தண்ணீர் மூழ்கி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ